Saturday, March 21, 2015

புரூஸ்லீயின் வரலாறு: மர்ம மரணத்தின் நிஜ முடிச்சு அவிழ்கின்றது - The Mystery of Bruce Lee's Death


புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.


புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.


1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது  Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற் பிக்க வேண்டாம் என்று அறிவித்த து. இதைத் தவிர்த்தால் லீ  Wong Jack Man  னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக் கொண்டார். ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபல மான  martial arts வீரராக இருந்தவர்.லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலைமூடிவிட வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொ ண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடை யே நடை பெற்ற‍ கடுமையான  இந்த  மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப்  பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடு கிடு வெனப் பரவியது.


இந்த மோதலுக்குமுன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்க‌ ள்  ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்க ள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத் தை ப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறி வேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் க‌வலை யின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலை க்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் லீ ஹோய்-சுவென் என்ற நடிகருக்கு 1940 – ஆம் ஆண்டு புரூஸ்லீ பிறந்தார்  இயற் பெயர் லீ ஜுன்பேன். பின்ன‍ர் இவரது குடும்பம் சீனா திரும்பிய தும்,  பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கி னார். 18-வது வயதிலேயே பாக் ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதை யடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ, பெற்றோர் அவரை சான்பிரான்சி ஸ்கோ அனுப்பினர்.



அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ் லி, வாஷிங்டன் பல்கலை கழகத்தில் தத்துவம் படித்தார். கூட வே, சனத் தற்காப்புக் கலையை மற்றவ ர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண் டை முறைக்கு சீனாவில் பெரும் வ‌ரவே ற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறி வித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன் னார் லீ.

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியா ன ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூ லில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனா ர் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியா கி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள் சொன் னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத் தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்று மே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உரு வாக்குபவர்களே சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க் கை சொல்லும் மந்திரம்!

முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. 

'குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!

புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சுமம் என்ன?

புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.




புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது.

"கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை.

புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக் கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்த! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது.

குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார்.

ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடைய ’கேம் ஆஃப் டெத்’ படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ.

சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான். தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக 'ஆழ்மன அமைதியை' அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது.

ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார்.

அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை உண்டார். 'என்டர் தி டிராகன்' படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார்.

ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது.

தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார்.

ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின.

புரூஸ்லீயின் மின்ன‍ல்வேக தாக்குதல்கள்:

வேகம் என்பதன் அர்த்தம் தேடிப்பார்த்தால் அதில் புரூஸ் லீ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும், இவரது வேகத்தை காமராவுக்குள் கொண்டு வரமுடியாமல் 24என இருந்த ஃபிரேமின் அளவை 34ஆக மாற்றிய ஹாலி வூட் வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றன.

புரூஸ்லீ ஒரு அதிசயப் பிறவி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவ ரது மிகத்துல்லியமான சண்டையிடும் முறைதான்காரணம் என்ப தும் யாவரும் அறிந்ததே.

புரூஸ்லீ இங்கே காட்டப்பட்டுள்ள வீடியோவில் செய்யும் சாகசத்தைப் பாருங்கள், ஒரு நெஞ்சாக்கில் தீப் பற்றவைக்கும் கடதாசி ஒட்டப்படுகின்றது பின் அவரது அதி வேக நெஞ்சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக் கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறிய ப்படும் தீப்பற்றாத தீக்குச்சி களை தனது கவனம் சிதறாத நெஞ்சாக் சுற்றுகை யின் மூலம் பற்ற வைக்கின்றார்.

இது யாரால் முடியும், நிச்சய மாக அவர் ஒரு அதிசயப் பிறவிதான்!!! கொஞ்சக்காலம் தான் வாழ்ந்தாலும் நம் மனங்க ளில் நீங்கா இடம்பிடித்து விட்டார் எங்கள் மாஸ்டர் புரூஸ் லீ! 

வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது.



No comments:

Post a Comment