Wednesday, March 4, 2015

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் (Kadaknath Karunkozhi) - Most Immunity " Kadaknath " Black Chickens

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் : இதய நோயாளிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு




மத்தியபிரதேச மாநிலத்தில், காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' கருங்கோழிகள், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகளுக்கு, இதய நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ, 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடக்நாத் என்னும் கருங்கோழிகள், மத்திய பிரதேசத்தை தாயகமாகக் கொண்டவை. இந்த கோழிகள் அங்குள்ள மலை வாழ் பழங்குடியின மக்களால் பராமரிக்கப்பட்டும், காடுகளில் தானாக வளரும் இயல்பை கொண்டவை.

"பிளாக் மீட் சிக்கன்' : இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இதற்கு பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என, அழைக்கப்படுகிறது. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கடக்நாத் கோழி இறைச்சியை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டும் உள்ளது.
இதன் காரணாக, இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் உள்ளது.


முழுதும் கறுப்பு தான் : இந்த கோழி ரகம் வெளிப் பகுதியில் மட்டுமின்றி உட் பகுதி, அதாவது சதைப்பகுதி அனைத்திலும் கருப்பாகவே காட்சி அளிக்கிறது. உட்பகுதியில், ஒரு சில பகுதிகளில் மட்டும் சதை கருப்பு, வெள்ளை கலந்து காணப்படுகிறது. தற்போது இந்த கோழி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில், பத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோழி உயிருடன் கிலோ, 300 ரூபாய்க்கும், கறியாக, 370 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் கோழியை போல் அல்லாமல், முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும், இக்கோழி ரகங்கள், தமிழகத்தில்ல சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பிரத்தியோக பண்ணை அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஓமலூரில் பண்ணை அமைத்த கோழியை வளர்த்து வரும் வினோத்குமார் கூறியதாவது: இக்கோழிக்கு வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் மவுசு அதிகம். அங்குள்ள மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

உணவுக் கழகத்தினர் சான்று : மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், இந்த ரக கோழிகள் இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது. இந்த கோழிகளை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முட்டை ஒன்று, 60 ரூபாய் என்ற விலை கொடுத்து, 100 முட்டைகளை வாங்கினேன். அதை வைத்து, குஞ்சு பொறித்ததில், 50 குஞ்சுகள் மட்டும் கிடைத்தன. தற்போது அதன் மூலம் கோழிகள் நாளுக்கு நாள் பெருக்கம் அடைந்து வருகின்றன. கோழி வளர்ப்பில் எந்த வகையிலான செயற்கை மருந்து, மாத்திரை பயன் படுத்துவது இல்லை. கோழியின் உடல், முட்டைகளில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், பராமரிப்பில் மருத்துவ செலவு இல்லை. செயற்கை கருவூட்டல் கிடையாது. பண்ணையிலேயே ஒவ்வொரு அறையிலும், மூன்று முதல் நான்கு சேவல் கோழிகள் மட்டும், பெட்டை கோழிகளுடன் வளர்க்கிறேன். கருவூட்டம் பெறும் கோழிகள், 15 நாள் முட்டை இடுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிக்கு பின், மீண்டும் முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகளை கொண்டு கோழிகளை உருவாக்குகிறேன். ஒரு நாள் ஆன கோழிக் குஞ்சை, 60 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். நான்கு மாதம் ஆன கோழியின் எடை, ஒன்றரை கிலோ என்ற வகையிலும், ஆறு மாதம் வளர்க்கப்படும் கோழியின் எடை, இரண்டு கிலோ என்ற அளவுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு: 99655 68919









2 comments:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete
  2. பண்ணை வைக்க விரும்புகிறேன் வழி முறைகள் கூறுங்கள். முதலீடு பற்றியும் கூறுங்கள்... நன்றி

    ReplyDelete